பாஜக கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா வேட்புமனு தாக்கல்!

சபாநாயகர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், எதிர்க்கட்சியான ‛இண்டி’ கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ்-ம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த தேர்தலில் போட்டி உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று நரேந்திர மோடி, 3வது முறையாக பிரதமரானார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் முக்கியமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய (ஜூன் 24) முதல்நாள் கூட்ட அமர்வில், அனைத்து எம்.பி.,க்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 17வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பா.ஜ.க., தலைமை முடிவு செய்துள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஓம் பிர்லா சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இன்று, அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை உறுப்பினர்களால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் என்பவர், ‛இண்டி’ கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top