ஜனாதிபதி திரௌபதி முர்மு பிறந்த நாள்! பிரதமர் மோடி வாழ்த்து!

ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜனாதிபதிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான சேவையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் நம்மை ஊக்குவிக்கிறது.

ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும், சிரத்தையும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது. அவரது வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமைக்காக இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top