டெல்லியில் இன்று வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

டெல்லியில் இன்று (மே 25) மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனநாயக கடமையாற்றினார். காலை 9 மணியளவில் டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top