ஜூன் 4ம் தேதி பாஜக ஜெயிக்கும்.. தண்ணீருடன் தயாராக இருங்க! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரசாந்த் கிஷோர்!

ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆங்கில மற்றும் இந்தி சானல்களின் நேர்காணல்களில்  தொடர்ந்து சொல்லி வருகிறார். 

இவரது இந்தக் கருத்து தாங்கள் சமீபத்தில்  கட்டவிழ்த்து உள்ள பாஜக தேய்கிறது என்ற கருத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் இவரது கூற்றை  இண்டி கூட்டணியை சேர்ந்த பலர் திட்டமிட்டு கேலி செய்து வருகின்றனர். 

இதற்கு பதிலடியாக பிரசாந்த் கிஷோர் இன்று தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது;

கோடை வெயிலுக்கு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மனதுக்கும் நல்லது; எனது கணிப்பை கேட்டு கூச்சல் போடுபவர்கள், ஜூன் 4ம் தேதி நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 4ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இண்டி கூட்டணி நாங்கள் ஜெயித்துவிடுவோம் என்ற கனவில் உள்ளனர். அவர்களின் கனவு ஜூன் 4ம் தேதி பகல் கனவாக மாறப்போகிறது என்பதை பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top