தேர்தலுக்காக துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணம்!

மக்களவைத் தேர்தலுக்காக துபாயிலிருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை தமிழ்நாட்டிற்கு கடத்த திட்டமிட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலை திராவிட கட்சிகள் செய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை தேர்தல் சமயத்தில் வெளியே கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக அதிமுக, திமுக தொடர்புடைய காண்ட்ராக்டர்கள் வீடுகள், பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் ரூ.32 கோடி பறிமுதல் என ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகளவில் பணம் கைப்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தைக் கடத்த திட்டமிட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இது குறித்து வருவான வரித்துறை வட்டாரங்கள் கூறும்போது,

“துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப்பிடம் விசாரணை மேற்கொண்டோம்.

அவர் துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும், அவரது செல்போன், வாட்ஸப் சேட், லேப்டாப்பை ஆய்வு செய்ததில், துபாயை சேர்ந்த செல்வம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அப்பு என்கிற விநாயகர் வேலன் ஆகியோர் உதவியுடன் முக்கிய அரசியல் கட்சிக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஹவாலா பணப்பரிமாற்றத்தில், துபாயை சேர்ந்த மோனிகா விரோலா, மலேசியாவை சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து வினோத் குமார் ஜோசப்பிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top