ராகுல் அரசியலுக்கு லாயக்கில்லை; பா.ஜ.க., வேட்பாளர் கங்கனா ரனாவத்!

இன்னும் சில ஆண்டுகளில் 60 வயதை நெருங்குபவர் இளம் தலைவரா என ராகுலுக்கு எதிராக பாஜக வேட்பாளரும், பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பொதுத்தளத்தில் தேசத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் வர உள்ள மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் களம் இறங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களாக தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபல ஹிந்தி சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் கங்கனா ரனாவத் பங்கேற்றோர். அப்போது அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”ராகுலின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அவரை அரசியல்வாதியாக மாற்றியுள்ளனர்.

அந்தப் பணியை அவரால் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் மீண்டும் மீண்டும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் 60 வயதை எட்டிவிடுவார். ஆனாலும், மீண்டும் மீண்டும், அவர் (ராகுல்) ஒரு ‘இளம் தலைவர்’ என அறிமுகப்படுத்தப்படுகிறார்.

அவர் சொந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். குழந்தைகள் வாரிசு முறைக்கு பலியாகின்றனர். உதாரணமாக, அவர் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், ஒரு நடிகராக விரும்பினால் என்ன செய்வது? அவர் ஒரு நடிகராக இருக்கலாம். திரைப்படத் துறையில், (துறைக்குள் வருமாறு) பெற்றோர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ராகுல், பிரியங்கா அத்தகையவர்களின் வாழ்க்கை பாழாகிவிட்டது. ராகுல், பிரியங்கா காந்தி… இருவரையும் எனக்குப் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை தொந்தரவு செய்வது போல் தெரிகிறது. அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுதியானவர்கள். இப்போதுகூட தாமதமாகிவிடவில்லை. அவர்களின் தாயார் (சோனியா) அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top