பா.ஜ.க. கூட்டணி 399 இடங்களில் அமோக வெற்றி பெறும்: இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் தெரியவரும்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக 543 தொகுதிகளும் மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரை 1,79,190 பேரிடம் இந்தியா டிவி கருத்து கணிப்பு நடத்தியது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 399 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் அமைத்த இ.ண்.டி. கூட்டணிக்கு வெறும் 94 இடங்கள் கிடைக்குமாம் , அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 38 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம். மற்ற மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து 50 இடங்களில் வெல்லுமாம்.

ஒவ்வொரு மாநிலமாக கருத்து கணிப்பு முடிவுகளை பார்ப்போம்:

ஆந்திர பிரதேசம்: மொத்தம் 25 (ஜெகன் கட்சி 10, தெலுங்கு தேசம் 12, பாஜக 3)

அருணாச்சல பிரதேசம்: மொத்தம் 2 (பாஜக 2)

அஸ்ஸாம்: மொத்தம் 14 (பாஜக 11, ஏஜிபி 1, உபிபிஎல் 1, ஏஐயுடிஎப் 1, காங்கிரஸ் 0)

பீகார்: மொத்தம் 40 (பாஜக 17, ஜேடியூ 14, ஆர்ஜேடி 1, எல்ஜேபி (ஆர்) 5, எச்ஏஎம்1, ஆர்எல் எம் 1, காங்கிரஸ் 1)

சத்தீஸ்கர்: மொத்தம் 11 (பாஜக 10, காங்கிரஸ் 1)
கோவா: மொத்தம் 2 (பாஜக 2)

குஜராத்: மொத்தம் 26 (பாஜக 26)

ஹரியானா: மொத்தம் 10 (பாஜக 10)

ஹிமாச்சல பிரதேசம்: மொத்தம் 4 (பாஜக 4)

ஜார்கண்ட்: மொத்தம் 14 (பாஜக 12, ஏஜேஎஸ்யூ1, ஜேஎம்எம் 1)

கர்நாடகா: மொத்தம் 28 (பாஜக 22, ஜேடிஎஸ் 2, காங்கிரஸ் 4)
கேரளா: மொத்தம் 20 (காங்கிரஸ் 10, இடதுசாரிகள் 7, பாஜக 3)

மத்தியப் பிரதேசம்: மொத்தம் 29 (பாஜக 29)

மகாராஷ்டிரா: மொத்தம் 48 (பாஜக 27, சிவசேனா-உத்தவ் 7, என்சிபி (அஜித்) 2, சிவசேனா-ஷிண்டே 8, என்சிபி-சரத்பவார் 2, காங்கிரஸ் 1, மற்றவர்கள் 1)

மணிப்பூர்: மொத்தம் 2 (பாஜக 1, காங்கிரஸ் 1)

மேகாலயா: மொத்தம் 2 (என்பிபி 1, காங்கிரஸ் 1)

மிசோரம்: மொத்தம் 1 (இசட்பிஎம் 1)

நாகாலாந்து: மொத்தம் 1 (என்டிபிபி 1)

ஒடிஷா: மொத்தம் 21 (பிஜேடி 11, பாஜக 10)

பஞ்சாப்: மொத்தம் 13 (ஆம் ஆத்மி 6, காங்கிரஸ் 3, பாஜக 3, அகாலி தள்1)

ராஜஸ்தான்: மொத்தம் 25 (பாஜக 25)

சிக்கிம்: மொத்தம் 1 (எஸ்கேஎம்1)

தமிழ்நாடு: மொத்தம் 39 (திமுக 18, அதிமுக 4, பாஜக 3, காங்கிரஸ் 8, பாமக 1, மற்றவை 5)
தெலுங்கானா: மொத்தம் 17 (காங்கிரஸ் 9, பாஜக 5, பிஆர்எஸ் 2,மோவைசி கட்சி 1)

திரிபுரா: மொத்தம் 2 (பாஜக 2)

உத்தரப் பிரதேசம்: மொத்தம் 80 (பாஜக 73, ஆர்எல்டி 2, அப்னா தளம் (எஸ்) 2, எஸ்பி 3, காங்கிரஸ் 0, பகுஜன் சமாஜ் 0)

உத்தரகாண்ட்: மொத்தம் 5 (பாஜக 5)

மேற்கு வங்கம்: மொத்தம் 42 (திரிணாமுல் காங்கிரஸ் 19, பாஜக 22, காங்கிரஸ் 1)

அந்தமான் நிக்கோபார்: மொத்தம் 1 (பாஜக 1)

சண்டிகர்: மொத்தம் 1 (பாஜக 1)
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: மொத்தம் 2 (பாஜக 2)

ஜம்மு காஷ்மீர்: மொத்தம் 5 (பாஜக 3, தேசிய மாநாடு 3, காங்கிரஸ் 0, பிடிபி 0)
லடாக்: மொத்தம் 1 (பாஜக 1)

லட்சத்தீவு: மொத்தம் 1 (காங்கிரஸ் 1)

டெல்லி: மொத்தம் 7 (பாஜக 7 )

புதுச்சேரி: மொத்தம் 1 (பாஜக 1)

மொத்தம் 543 இடங்கள்:

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 399 இடங்களை கைப்பற்றுகிறது.

இ.ண்.டி. கூட்டணி 94, இ.ண்.டி. கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகள் 50 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி நடத்திய தமிழத்தின் கருத்துக்கணிப்பில் ஒரே நாடு வேறுபடுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றிப்பெறுவது உறுதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top