‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி! தலைவர் அண்ணாமலை!

சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி அறிவியல் கலைக் கல்லூரியில் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் இன்று (மார்ச் 14) டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி அறிவியல் கலைக் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி நூல் அறிமுக விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இன்றைய தினம், இந்து தமிழ் திசை ஊடகம் சார்பில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், திரு. அஜய் சிங் அவர்கள் எழுதிய,  ‘The Architect of the New BJP’ என்ற நூலின் தமிழாக்கம் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங் அவர்கள், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் அவர்களின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள திரு ரங்காச்சாரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விழாவில் முன்னிலை வகித்துச் சிறப்பித்த, காமராஜ் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், ஐயா தமிழருவி மணியன் அவர்கள், மூத்த அரசியல் தலைவர் திரு கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள், மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சேஷாத்ரி சாரி அவர்கள், இந்து தமிழ் திசை பத்திரிகை இயக்குனர் திருமதி. விஜயா அருண் அவர்கள், விழாவுக்குத் தலைமையேற்ற இந்து தமிழ் திசை பத்திரிகை ஆசிரியர் திரு கே.அசோகன், பத்திரிக்கையாளர் ஷபி முன்னா அவர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top