திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவதூறு வழக்கு: ஸ்டாலினை விளாசிய தலைவர் அண்ணாமலை!

இந்த நிலையில், போதைப் பொருளால் தமிழகத்தில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். திமுக ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகளே தமிழகம் முழுவதும் போதைப் பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளை சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக அரசு, தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top