கோவை மன்னிக்காது: பாஜக மாநில தொழில் பிரிவு செல்வகுமார் மீது வழக்கு! 

கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை முன்விடுதலை செய்வது  தொடர்பாக, பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் ,சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டதற்காக, அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோவையில் அண்ணாமலையின் போர்வாளாக செயல்பட்டு, பிஜிஆர் ஊழல், டாஸ்மாக் பார் முறைகேடு ஆகியவற்றை  பரவலாக பொது வெளியில் எடுத்துச் சென்று திமுகவின் கொங்கு பகுதி பொறுப்பாளர், முன்னாள் இலாக்கா  இல்லாத மந்திரி செந்தில் பாலாஜியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியதில் செல்வகுமாருக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. 

இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலத் தலைவர் அண்ணாமலை டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, அதிகாலை மூன்று மணிக்கு 10 போலீசார் செல்வக்குமார் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அதனால் அவர் ஒரு வாரம் கோவை மத்திய சிறையில் இருந்தார். 

கடந்த 2022ம் ஆண்டு திமுக அரசால் உயர்த்தபட்ட மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் பேசி வந்தவர். தமிழ் ஊடகங்களையும் கடந்து ஆங்கில ஊடகங்களில் அவர் பேசியது, திமுகவை தேசிய அளவில் தோலுரித்துக் காட்டியது. 

கடந்த 2022ம் ஆண்டு, திமுக அரசின் அநியாய மின் கட்டண உயர்வை எதிர்த்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் பேசி வந்தார். இதுவும் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே திரும்பியது. அதனால் திமுக அரசின் கோபம் அவர் மீது கூறியது.

ஆவின் பாலில் கொழுப்பு குறைக்கப்பட்டு,  அதே விலையில் விற்கபடுவதற்கு எதிராக தீவிரமாக ” கொழுப்பு திருட்டு ” என்ற பெயரில் அதிகமாக பிரச்சாரம் செய்தவரும் அவரே. 

சென்ற வாரம் கூட இலவச வேட்டி சேலை திட்டத்தில் பருத்திக்கு பதிலாக பாலியெஸ்டர் நூல் பயன்படுத்தியதை மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மூலம் வெளி கொண்டு வந்ததில் அவரது பங்களிப்பு உண்டு! 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், கடந்த சில வாரங்களாக அவர்,  பல்வேறு தொழில் அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருது திமுகவுக்கு எரிச்சல் ஊட்டி இருக்கிறது.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு,  கோவை குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14 அன்று #கோவை_மன்னிக்காது என்ற Hastag  எக்ஸ் வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனதைத் தொடர்ந்து, 

அதற்குக் காரணம் செல்வகுமார் தான் என்று அவர் மீது குற்றம் சுமத்தியது கோவை காவல்துறை.  கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை விடுதலை செய்ய திமுக, அதிமுக, நாம் தமிழர் , விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குறுதி கொடுத்திருப்பதாக அவர் எக்ஸ்  பதிவிட்டு இருந்தது அனைத்துக் கட்சிகளின் கோபத்தையும் அவர் மீது திருப்பியதாகக்  கூறப்படுகிறது. 

இதனால்,  பிப்ரவரி 14-ல் அவர் பதிவிட்ட சமூகவலைதள பதிவுகள் மதபிரச்சனையை தூண்டுவதாக கூறி கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் செல்வகுமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று,  பிப்ரவரி 21 அன்று,   கோவையில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார் செல்வகுமார். அப்போது,  அவர் கைது செய்யப்படுவார் என்று ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டதை தொடர்ந்து, பாஜக தொண்டர்களும் அங்கு குழுமி விட்டனர். எனவே விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படாமல் அனுப்பப்பட்டிருக்கிறார். 

நாளை (22.02.2024) தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை யின்  ‘ என் மண், என் மக்கள்  யாத்திரை  கோவை  சிங்காநல்லூரில்

நடைபெற உள்ளது. அதே போல வருகிற பிப்ரவரி 27 இல், கோவைக்கு அருகில் உள்ள பல்லடத்தில் நடைபெற உள்ள ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். 

எனவே, இந்த  நேரத்தில்  செல்வக்குமாரை  கைது செய்தால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கக்கூடும் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களிடையே இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தாலும், விடியாத திமுக அரசு அவரை கைது செய்யாமல் விடுவித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது பற்றி,  செல்வக்குமார் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
மூன்று மணி நேர விசாரணை முடிந்தது !
என்னுடைய தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக சமர்பித்து விட்டு வந்துள்ளேன். தேவைபடும் பொழுது மீண்டும் ஆஜராக தயாராகவே உள்ளேன்.

மடியில் கனமில்லை
வழியில் பயமில்லை.

கடந்த மூன்று வருடத்தில் கோவை மாநகர் சைபர் கிரைமில் மட்டும் என் மீது பதிவு செய்யபட்டுள்ள நான்காவது அரசியல் வழக்கு இது.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து காவி சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top