மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வட்டியில்லா கடன்: 50 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்

மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கவுள்ளதாகவும் அதை 50 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம் எனவும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மாநிலங்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: 2047இல் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மாநிலங்களில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. அதை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் மாநிலங்கள் திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினா் மற்றும் மக்களையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காகவே இந்தக் கடனுதவி வழங்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top