இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!

ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் உடை மாற்றும் அறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கண்டு ரசித்தனர். எனினும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பல வீரர்கள் உணர்வசப்பட்ட நிலையில் இருந்தனர்.

இதனை கவனித்த பிரதமர் மோடி டிரஸ்ஸிங் அறைக்கு சென்று இந்திய வீரர்களை தேற்றி ஆறுதல் படுத்தினார். வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவுரைகளையும் பிரதமர் வழங்கினார்.

இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்களுக்கு இந்த தொடர் அருமையாக அமைந்தது. எனினும் முடிவு சரியாக அமையவில்லை. இதனால் நாங்கள் உடைந்து போனோம். ஆனால் பொதுமக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து நடைபோட வைக்கிறது.

எங்களின் டிரஸ்ஸிங் அறைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தது ஊக்கம் தந்தது மிகவும் சிறப்பான நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top