மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் பாராட்டு எனக்கான அங்கீகாரம்: ஏ.கே.பெருமாள் நெகிழ்ச்சி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 29) வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வாளர் அ.கா.பெருமாளை பாராட்டினார்.

பிரதமர் பாராட்டியது தொடர்பாக அ.கா.பெருமாள் கூறியதாவது: நாட்டார் வழக்காற்றியல் துறையில் கதை சொல்லுதல் மரபு குறித்து பிரதமர் கூறியதற்கும், என்னை பாராட்டியதற்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவிக்கிறேன்.

ஆராய்ச்சியாளனுக்கு அங்கீகாரம் என்பது முக்கியம்; அதிலும் எந்த சிபாரிசும் இல்லாமல் எனக்கு இந்த  அங்கீகாரம் கிடைத்தமைக்கு நன்றி. கதை சொல்லும் மரபு நம் நாட்டில் பழங்குடியினரிடம் அதிகம் இருந்துள்ளது; இளைஞர்கள் இரவில் கூடி, வயதானவர்கள் தங்கள் அனுபவத்தை கதையாக சொல்லும் மரபு பழங்குடியினரிடம் இருந்துள்ளது.

ஆசிரியரிடம் சென்று பாடம் படிப்பது அப்போது கிடையாது, கதை வழியே மரபை கற்றுக் கொண்டனர். தற்போது படிப்பு என்பது பணம் சார்ந்து உள்ளது; இந்த நிலை உருவான பிறகு மரபு மறைந்து வருகிறது; இது நல்ல சமூகத்திற்கு நஷ்டம், எதிர்காலத்தில்தான் இதன் விளைவு தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top