ரூ.12 கோடி திருமலைநாயக்கர் மஹால்  பணி ஆய்வின்போது  உயிர் தப்பிய எ.வ.வேலு!

மதுரை, திருமலை நாயக்கர் மஹாலில் புனரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகின்றன. அதனை பொதுப்பணித்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (அக்டோபர் 4) ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானம் உடைந்து அதிகாரி தவறி விழுந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு நூலிலையில் உயிர் தப்பினார்.

கட்டுமானப் பணியை பார்வையிட சென்ற எ.வ.வேலுவுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் அமைச்சர் நின்றிருந்த இடம் திடீரென்று உடைந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக அதிகாரியும், அமைச்சரும் உயிர் தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டுமானத்தை ஊழல் இல்லாமல் செய்தால் ஏன் இப்படி இடிந்து விழுகிறது என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலாப் பயணிகள்…

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதால் சாலை முதல் அரசு கட்டடங்கள் வரை தரமின்றி அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைகள் தரமின்றி போடப்பட்டுள்ளதை இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் இடத்தில் நடுவே அடிபம்புகள்  புதைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். சாலையில் நிற்கும் காரை சுற்றி தார் சாலை போடப்பட்டதை பார்த்திருப்போம்.

இப்படி எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது விடியல் அரசு..

தல பத்திரம் என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் விடியலரசு விடுக்கும் செய்தி என்று கேலி செய்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top