என்ன எதிர்பார்த்தோமோ அது நடக்கத் தொடங்கியுள்ளது!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மூலமாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார்.  அவர் செல்லும் வழியில் ஏராளமான முதியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் அவரை கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தாய்மார்கள் ஆரத்தி எடுக்கின்றனர், இளைஞர்கள் செல்ஃபி எடுக்கின்றனர், பெரியவர்கள் கட்டித் தழுவி ஆசி வழங்குகின்றனர். 

அது போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் தினமும் யாத்திரையின்போது நடக்கிறது.

இது பற்றி பிரபல சமூக ஊடகப் பதிவர் ஆனந்தன் அமிர்தன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

என்ன எதிர்பார்த்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் ஒரு வீடியோ…

#என்_மண்_என்_மக்கள் யாத்திரையில் அண்ணாமலைக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்ய வந்த சுமார் 50-55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சால்வையைப் போர்த்தி விட்டு,
அன்பின் மிகுதியால், அண்ணாமலையைக் கட்டிக் கொண்டு உற்சாகத்தில் குதித்து அவரை உலுப்பி விட்டார். இந்த நிகழ்வை சாதாரணமாகக் கடப்பவர்களுக்கு தமிழக அரசியல் சுத்தமாகத் தெரியாது என்பது உறுதி.  

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 2026ல் அண்ணாமலை முதல்வராக வெற்றி பெற்று அரியணை ஏறியே ஆவார். சத்தியமாக இதனை ஒரு சங்கியாக, காவியாகச் சொல்லவில்லை.

தமிழர்களைப் பொருத்தவரை தனிமனிதத் துதி என்பது பல்லாயிரம் வருடங்களாக ஊறிப் போன விசயம். மன்னர்களைத் துதித்தவற்றையெல்லாம் இலக்கியம் தேடிப் படிக்கணும். அதை விட்டுவிட்டு, கடந்த அரை நூற்றாண்டு தமிழக அரசியலைக் கவனித்தால் கூட போதும்.

காமராஜரை அப்பவும் சரி இப்பவும் சரி… மரியாதையாகவும், நல்ல நிர்வாகி என்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். ஆனால், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் நிர்வாகத்தை விட கரிஷ்மாவினால் தான் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள். அதனால் தான் ஆட்சியில் அமர்த்தப்பட்டு அழகு பார்க்கப்பட்டார்கள்.

வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இது போன்றதொரு பிம்பம் ஆரம்பத்தில் லேசாகக் கிடைத்தது. ஆனால், இருவருமே அதைத் தக்க வைத்துக் கொள்ளாமல் அல்லது வளர்த்துக் கொள்ளாமல் வீணடித்து விட்டார்கள்.

இன்றைக்கு அந்த ஒற்றை மனிதன் குதித்தது,   “தன் தலைவனை அடையாளம் கண்டுவிட்டோம்” என்ற உற்சாகத்தின் வெளிப்பாடு என்பதை தமிழக மக்களையும் அரசியலையும் கொஞ்சம் அறிந்திருந்தால் கூட 100% உணர்ந்திருப்பார்கள்.

இந்த எதார்த்த / சாமானிய மனிதனின் செயல் எந்தக் கட்சியையும் சாராத பொது ஜனங்களின் உணர்வையே பிரதிபலிக்கிறது.
ஒரு குழந்தை சொல்கிறது…

மோடி தாத்தாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க என்று. மோடியைத் தாத்தா என்று தன் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கும் ஒரு குடும்பம், அதன் பிரதிநிதியாக அண்ணாமலை மாமாட்ட சொன்னா மோடி தாத்தா வருவார் என்பது வரை தமிழக குடும்பங்களுக்குள் நுழைந்திருக்கிறார் அண்ணாமலை.

அதிமுக இதுவரை வென்றதற்கு மிக மிக முக்கியக் காரணம், இப்படி எந்தக் கட்சியையும் சாராத வெகுஜனங்களின்  உணர்வு தான்.

அண்ணாமலை அரசாள வெகு தூரம் இல்லை. கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறீர்கள் பாஜகவின் தமிழக கார்யகர்த்தாக்களே! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top