அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு: இந்திய ராணுவம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இனி நுழைவு தேர்வு மூலம்  தான் இவர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பொது, அரசியல் காட்சிகள் அதனை எதிர்த்ததும்.ஆனால் இளைஞர்கள் ஆர்வமாக வேலையில் சென்று சேர்ந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்னி வீரர்களுக்கன விண்ணப்பங்கள் குவிந்து வரும் நிலையில் இவர்களுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்கிறது  இந்திய ராணுவம்.

அக்னிபாத் திட்டத்தின் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இவற்றை முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இனி முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது பற்றி  ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு உடல் தகுதித் தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும். மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தை குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top