எங்கே போகிறது ? நாம் செலுத்தும் செஸ் வரி

கூலிக்கு மாரடிக்கும் லெட்டர் பேட் கட்சிகளும், பிரிவினைவாத சக்திகளும் கேட்கும் பல அபத்தமான கேள்விகளில் ஒன்று,  என் மாநிலம் செலுத்தும் செஸ் வரி எங்கே போகிறது?. இந்தியா என்பது ஒன்று பட்ட தேசம். காஷ்மீரில் விளைகின்ற ஒரு பொருளை, கன்யாகுமரியில் இருப்பவன் அதிகமாக பயன்படுத்துடுவான். தஞ்சையில் விளைகின்ற நெல், மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்படும். அப்படித்தான், இங்கு வசூலிக்கப்படும் மத்திய அரசுக்கான வரி, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மாநிலங்களுக்கும்  பயன்படுத்தப்படுகிறது . எது பின்தங்கிய மாநிலமோ அங்கே வளர்ச்சியின் பொருட்டு அதிக நிதி செலவழிக்கப்படுகிறது. மத்திய அரசு செஸ் வரியினை எவ்வாறு மக்களுக்கே திருப்பி வழங்கியுள்ளது என்பதை ஒளிவு மறைவின்றி அட்டவணையிட்டு அறிவித்துளளது.

 இந்தியா முழுவதிலும்  தேசிய நெடுஞ்சாலைகள்  அமைப்பதற்கு  ரூ.1,29,147/- கோடியும்,  ரயில்வே துறையின் கட்டமைப்பிற்கும்,  மேம்படுத்துதலுக்கும் ரூ. ரூ.52,700/- கோடியும், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் , (இணைக்கப்படாத குடியிருப்புகளுக்கு நல்ல சாலைகளை வழங்குதல்) மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்  ரூ. 39,000/- கோடியும், ஜல் ஜீவன் ( குடிநீர் இணைப்பு  வழங்குதல்) திட்டத்தின் கீழ் ரூ. 67,192/- கோடியும், எல்லையில் சாலைகளை அமைப்பதற்கு ரூ. 3,500/- கோடியும், இணைய சேவையான ஆப்டிகல் பைபர்க்கு ரூ. 1,961/- கோடியும் என 2022-23 ற்கான உத்தேச செலவீனம்  என்ற தரவுகளை மத்திய அரசு தந்துள்ளது.

மாநில அரசுகளும் இதுபோல் தாங்கள் வசூலிக்கும் வரியினை எதற்காக பயன்படுத்தினார்கள் என்ற விபரங்களை வெளியிட துணிவுள்ளதா? மக்கள் கேட்கத்தொடங்குவார்களா ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top